தமிழகத்துக்கு 17.25.. தெலங்கானாவில் 72.. SBI Clerk தேர்வு கட் ஆஃப்பில் ஏன் இவ்வளவு வித்தியாசம்?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: எஸ்பிஐ கிளர்க் பிரிலிம்ஸ் (SBI Clerk Prelims) தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியது. இதில் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண், மாநிலங்களுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசத்துடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் 17.25 மதிப்பெண்களாக கட் ஆஃப் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 72 மதிப்பெண்களாக உள்ளது. ஒரே தேர்வு முறையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் ஏன் என்று பல தெலங்கானா தேர்வர்கள் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். அவர்களுக்கான விளக்கமாக இந்த செய்தியை பார்ப்போம்

நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்றால் இது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான். எஸ்பிஐ என்று சுருக்கமாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்நிறுவனத்தில் காலி பணியிடங்களை எஸ்பிஐ வங்கியே ஒவ்வொரு ஆண்டும் , மாநில வாரியாக தேர்வு வைத்து நிரப்புகிறது. அந்த வகையில் ஜூனியர் அசோசியேட்( கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ்) பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு அண்மையில் வெளியானது . அத்துடன் மாநில வாரியான கட் ஆஃப் மதிப்பெண்களும் வெளியாகி இருக்கிறது

SBI bank tamil nadu Telangana jobs

இந்த ஆண்டு வெளியான கட் ஆஃப் மதிப்பெண்களில் தமிழ்நாடு தான் மிகக் குறைந்த மதிப்பெண்ணுடன் தேர்வர்கள் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறும் மாநிலமாக இருக்கிறது. அதே நேரத்தில் தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெரிய அளவில் கடந்த ஆண்டை விட உயர்ந்து உள்ளது.

தமிழ்நாடு, தெலங்கானா கட் ஆஃப் எவ்வளவு?

எஸ்பிஐ கிளர்க் பிரிலிம்ஸ் (SBI Clerk Prelims) தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் மாநில வாரியாகவும், பிரிவு வாரியாகவும் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2026-ம் ஆண்டுக்கான பொதுப்பிரிவு கட் ஆஃப் மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பெரிய வித்தியாசம் தெரிகிறது.

தமிழ்நாடு - 17.25
தெலங்கானா - 72
கர்நாடகா - 52.25
மகாராஷ்டிரா - 44
ஒடிசா - 44
குஜராத் - 73.25
ராஜஸ்தான் - 85.50
உத்தரப் பிரதேசம் - 86.75
இமாச்சலப் பிரதேசம் - 92.50

இதில் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா இடையேயான கட் ஆஃப் வித்தியாசம் 54.75 மதிப்பெண்கள் என்று இருக்கிறது. இன்னும் தெளிவாக சொல்வது என்றால். தமிழ்நாட்டில் 17.25 மதிப்பெண்கள் பெற்ற தேர்வர் அடுத்த கட்டத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார். ஆனால் தெலங்கானாவில் 72 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற முடியும்.

தமிழ்நாட்டில் ஏன் குறைந்த கட் ஆஃப்?

எஸ்பிஐ கிளர்க் தேர்வில் மாநில வாரியாக பணியிடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, அவர்களின் மதிப்பெண்கள் உள்ளிட்ட காரணிகள் கட் ஆஃப் மதிப்பெண்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் வழக்கம். எனவே இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 1,410 வழக்கமான காலிப்பணியிடங்களும், 106 பின்னடைவு காலிப்பணியிடங்களும் என மொத்தம் 1,516 இடங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் தெலங்கானாவில் 260 வழக்கமான காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளன.

தமிழ்நாட்டில் தெலங்கானாவைவிட அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் இருப்பது கட் ஆஃப் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கும் என தெரிகிறது. எனினும் காலிப்பணியிடங்கள் மட்டுமே கட் ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிப்பதில்லை. தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேர்வுக்கு தயாரான விதமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒரே கேள்வித்தாள் இல்லை

எஸ்பிஐ கிளர்க் (SBI Clerk Prelims) தேர்வு ஒரே பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை எல்லா மாநிலத்திலும் ஒன்று தான்.ஆனால் தேர்வு என்பது ஒரே நாளில் நடக்காது. பல்வேறு நாட்களில் மற்றும் பல்வேறு ஷிப்ட்களில் தேர்வு நடக்கும். இதனால் அனைத்து தேர்வர்களுக்கும் ஒரே கேள்வித்தாள்இருக்க வாய்ப்பே இல்லை. வெவ்வேறு ஷிப்ட்களில் கேள்விகள் கடினமாக இருக்கும். சிலருக்கு சற்றே எளிதாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மதிப்பெண்களை ஒப்பிடும்போது தேர்வின் கடினத்தன்மையை ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது.

எனினும் , ஒரே தேர்வு முறையில் தமிழ்நாட்டில் 17.25 மதிப்பெண்களும், தெலங்கானாவில் 72 மதிப்பெண்களும் கட் ஆஃப் ஆக இருப்பதை தெலங்கானா மாநில தேர்வர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நாங்கள் கஷ்டப்பட்டு படித்தாலும் எங்களுக்கு இவ்வளவு பெரிய கட் ஆஃப் என்பது அநீதி என குமுறுகிறார்கள்.
மாநிலங்களுக்கு இடையே இவ்வளவு வித்தியாசம் நியாயமா, தமிழகத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற தேர்வர் அடுத்த கட்டத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார். ஆனால் தெலுங்கானாவில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற முடியவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள்

ஆனால் உண்மையில் எஸ்பிஐ மாநில வாரியான காலிப்பணியிடங்களை நிரப்புகிறது. எனவேஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி போட்டி ஏற்படும். இதனால் தேசிய அளவில் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வாய்ப்பே கிடையாது. ஒரே வங்கி, ஒரே தேர்வு முறை, ஒரே பாடத்திட்டம் என்கிற சூழலில் 50-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் வித்தியாசம் ஏற்படுவது இந்தியா முழுக்க விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு அதிக பணியிடங்கள் காரணமாக தமிழ்நாட்டில் கட் ஆஃப் கடந்த ஆண்டின் 52 மதிப்பெண்களிலிருந்து 17.25 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் குறைவான இடங்களே உள்ளதால், தெலங்கானாவில் கடந்த ஆண்டு 52.50 மதிப்பெண்களாக இருந்த கட் ஆஃப் இந்த ஆண்டு 72 ஆக அதிகமாக உள்ளது. இதுதான் தற்போது பேசுபொருளாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+