எக்ஸாம் இல்லாமல் அரசு வேலை.. உங்க ஊரிலேயே! கைநிறைய சம்பளம்.. வேலைவாய்ப்பை அள்ளித் தரும் ரேஷன் கடைகள்
சென்னை: கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் (salesman) , கட்டுநர் (Packer) பணிக்கான 2,000 இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், http://drbchn.in என்ற இணையதளத்தில் நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கு தேர்வு எதுவும் இல்லாத நிலையில், நேரடியாகவே பணி நியமனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது.
ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆட்கள் தேவை செய்யப்படுகின்றனர். அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களை பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்ககளால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
07.11.2024 வரை ஆன்லைன் மூலமாக http://drbchn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நேரடி நியமனம் மூலமே பணி நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் 07.11.2024 பிற்பகல் 5.45 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பணியின் பெயர்: - நியாய விலை கடை விற்பனையாளர் (salesman)
ஊதியம்: தொகுப்பூதியமாக நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை மாதம் ரூ.6250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.8600 முதல் 29,000 வரை வழங்கப்படும்.
கூட்டுறவு நிறுவனத்தின் பெயர் - காலி பணியிடம்:
1.திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் - 9
2.பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை- 0
3.வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை- 0
4.காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை- 0
பிரதம கூட்டுறவு பண்டகசாலை -24
மொத்தம்- 33
2.பணியின் பெயர்: நியாய விலை கடை கட்டுநர் (Packer)
ஊதிய விபரம்: தொகுப்பூதியம் ரூ.5500 நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.7800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.
கூட்டுறவு நிறுவனத்தின் பெயர் மற்றும் காலி பணியிடம்:
1.திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் -88
2. பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை- 42
3.வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை- 51
4.காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை -95
5.பிரதமர் கூட்டுறவு பண்டகசாலை- 39
மொத்தம் -315
நியாய விலை கடை விற்பனையாளர், நியாய விலை கடை கட்டுனர் என மொத்தம் உள்ள காலிப் பணியிடங்கள் - 348. இது சென்னை மாவட்டத்திற்கு மட்டும் தான் அந்தந்த மாவட்ட காலிப் பணியிட விவரங்களுக்கு http://drbchn.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications