நோட் பண்ணுங்க.. 21 பட்ட படிப்புகள் அரசு பணிக்கு உகந்தது இல்லையாம்.. உயர் கல்வித்துறை மேஜர் அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 21 பட்டப்படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படாது என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 21 பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உயர் கல்வியில் பல்வேறு புதிய பட்டப்படிப்புகளை பல்ககலைக்கழகங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அது தொடர்பான சில புதிய படிப்புகள் அறிமுகம் செய்யபடுகிறது. இதில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று பட்டமும் பலர் பெறுகின்றனர்.

அரசு பணிக்கான கல்வித்தகுதிக்கு..
இவ்வாறு பட்டம் பெறுபவர்கள் அரசுப்பணிக்கு விண்ணப்பித்து அதில் தேர்வு ஆகும் பட்சத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே இத்தகைய குளறுபடிகளை தீர்க்கும் வகையில் எந்தெந்த பட்டப்படிப்புகள் ஏற்கனவே உள்ள பட்ட படிப்புகளுக்கு இணையானது என்பது குறித்து உயர் கல்வித்துறை தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 21 பட்டப்படிப்புகள் அரசு பணிக்கான கல்வித்தகுதிக்கு இணையற்றது என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வி துறை செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

வேதியியல் தகுதிக்கு இணையானவை அல்ல
'கோவை தொழில்நுட்பக் கல்லூரி வழங்கும் எம்.எஸ்சி., பயன்முறை (அப்ளைடு) வேதியியல், பாரதியாா் பல்கலை., திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் எம்.எஸ்சி., ஆா்கானிக் வேதியியல், திருச்சி நேஷனல் கல்லூரி எம்.எஸ்சி., பகுப்பாய்வு வேதியியல், பனாரஸ் ஐஐடி மற்றும் வாராணசி இந்து பல்கலை. வழங்கும் எம்.டெக் தொழிற்துறை வேதியியல், பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்சி., வாழ்க்கை அறிவியல் ஆகியவை எம்.எஸ்சி., வேதியியல் தகுதிக்கு இணையானவை அல்ல.

பி.காம்., எம்.காம்-க்கு..
இந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் எம்.எஸ்சி., வேதியியல் கல்வித் தகுதிக்கான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் எம்ஏ மொழியியல், எம்ஏ ஆங்கிலப் படிப்புக்கு இணையானதாக ஏற்கப்படாது. சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம்., காா்ப்பரேட் செக்ரட்ரஷிப், அழகப்பா பல்கலைக்கழகத்தின் எம்.காம்., காா்ப்பரேட் செக்ரட்ரஷிப் ஆகியவை அதன் மூலப் படிப்புகளான பி.காம்., எம்.காம்., ஆகியவற்றுக்கு இணையானவை அல்ல.

இயற்பியலுக்கு இணையானதல்ல
மேலும், கோவா பல்கலைக்கழகம், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு பல்கலைக்கழகம் வழங்கும் பிஏ ஆங்கிலம் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையாக கருதப்படாது. இதுதவிர திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்., தகவலமைப்பு மற்றும் பயன்பாடு (பகுதிநேர) படிப்பானது எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கும், விஐடி பல்கலை.யின் எம்.எஸ்சி., மின்னணுவியல் படிப்பு, எம்.எஸ்சி., இயற்பியலுக்கு இணையானதல்ல.

மின்னணுவியல் படிப்பு
இ.எம்.ஜி.யாதவ் மகளிர் கல்லூரியின் பி.எஸ்சி இயற்பியல் &தகவல் தொழில்நுட்பம், அழகப்பா பல்கலை.யின் பி.எஸ்சி., மின்னணுவியல் படிப்பு, திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் பிஎஸ்.சி., அறிவியல் ஆகியவை அரசுப் பணிக்கான பி.எஸ்சி.. இயற்பியல் கல்வித் தகுதிக்கு இணையாக ஏற்கப்படாது. புதுச்சேரி பல்கலைகழகம் உட்பட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் புதிதாக அறிமுகம் செய்துள்ள 20 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு ஏற்றவை என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications