தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 பயிற்சி பணியிடங்கள்.. டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
டான்ஜெட்கோ தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், பயிற்சி பணியிடங்களும் நிரப்பபடுகின்றன. அந்த வகையில், தற்போது 500 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி , வயது வரம்பு, ஊதிய விவரம் உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 395 பணியிடங்கள்
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 22
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் - 09
கணினி பொறியியல்/ தகவல் தொழில்நுட்பம் - 09
சிவில் இன்ஜினியரிங் - 15
இயந்திர பொறியியல் - 50
என மொத்தம் 500 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி & சம்பளம்: பயிற்சி பணியிடங்களுக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ படிப்பு முடித்து இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு கால பயிற்சி அடிப்படையில் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். ஊதியமாக மாதம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பெறுத்தவரை மெரிட் லிஸ்ட், மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். www.mhrdnats.gov.in , https://nats.education.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு தேர்வு அறிவிப்பை ஒருமுறை நன்கு படித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.02.2024 - முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். NATS போர்ட்டலில் "TANGEDCO" பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 20.02.2024 ஆகும். மெரிட் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியல் 26.02.2024 வெளியாகும்.
சான்றிதழ் சரிபார்ப்பு 05.03.2024 to 08.03.2024 வரை நடைபெற உள்ளது. தேர்வு அறிவிப்பினை படிக்க http://boat-srp.com/wp-content/uploads/2024/02/TANGEDCO_Notification_updated.pdf இங்கே கிளிக் செய்யவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications