நோ எக்ஸாம்.. மாதம் ரூ.35,400 வரை சம்பளம்.. அழைக்கும் ஐபிஆர்.. அசத்தலான வாய்ப்பு!
மத்திய அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்பகளுக்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் (The Institute for Plasma Research) செயல்பட்டு வருகிறது. இது குஜராத் மாநிலம் காந்திநகர், அசாம் மாநிலம் கவுகாத்தியில் அமைந்துள்ளது.
இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் உள்ளது.

காலியிடங்கள் எவ்வளவு?
பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பிரிவில் மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (சிவில்) பணிக்கு ஒருவர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (கம்ப்யூட்டர்) பணிக்கு 3 பேர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (எலக்ட்ரிக்கல்), சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (மெக்கானிக்கல்), சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (எலக்ட்ரானிக்ஸ்) ஆகிய பணிகளுக்கு தலா 10 பேர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (இயற்பியல்) பணிக்கு 12 பேர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பணிக்கு 5 பேர் என மொத்தம் 51 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு - மாதசம்பளம் என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (சிவில்) பணிக்கு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (கம்ப்யூட்டர்) டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (எலக்ட்ரிக்கல்) பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (மெக்கானிக்கல்) பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பணிக்கு டிப்ளமோ இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி (இயற்பியல்) பணிக்கு பிஎஸ்சி பிசிக்ஸ் படிப்பையும் 60 சதவீத மதிப்பெண்களுடன் படித்து முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.ipr.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் மார்ச் 15ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களின் மதிப்பெண், வயது அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications