வந்தாச்சு! சூப்பர் அறிவிப்பு.. நீங்களும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆகலாம்.. எப்போது விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது இளைஞர்களுக்கு பலரும் பெரும் கனவாக உள்ளது. வருடக்கணக்கில் இந்த தேர்வுக்காக படிப்பதோடு, காலையிலே மைதானங்களில் உடல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை காண முடியும்.

காவல்துறையில் பணியிடங்களை பொறுத்தவரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி தமிழக காவல்துறை பணியிடங்களில் உள்ள காவலர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இடங்களை நிரப்பி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 30- ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எழுத்து தேர்வானது வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த சீருடை பணியாளர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் உள்ள காலிப்பணியிடங்களில் 20 சதவீதம் போலீஸ்துறையினருக்கு ஒதுக்கப்பட்ட்டு இருக்கிறது
காலிப்பணியிட விவரங்கள்:
- காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) - 366 பணியிடங்கள்
- சப் இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படை) - 145
- காவல் துணை கண்காணிப்பாளர்கள் ( TSP) - 110
கல்வித்தகுதி: பல்கலைக்கழக மானியக்குழு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 30 - க்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் நிலைதேர்வுகள் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் உள்ளிட்டவைகளை கொண்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வுக்கட்டணம்: விண்ணப்பதாரர் தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்த தேர்வு தொடர்பான மேலும் தகவலை https://www.tnusrb.tn.gov.in/என்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இணையத்தளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் .
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications