ராமேஸ்வரம் கோயிலில் நிரந்தர வேலை! 76 பணியிடங்கள்! 8ம் வகுப்பு டூ டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள 76 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள 7 வகையான பணியிடங்களுக்கும் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள 76 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள 7 வகையான பணியிடங்களுக்கும் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம், சம்பளம் எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள், கல்வித்தகுதி:
* தமிழ்புலவர் - 01 பணியிடம்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து தமிழ் பாடத்தில் பிலிட் அல்லது பிஏ, ஏம்ஏ, அல்லது எம்லிட் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் மற்றும் திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்று இருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை 18,500 - 58,600 வரை வழங்கப்படும்.
* பிளம்பர் 1: ஐடிஐ நிறுவனத்தால் வழங்கப்பட்ட பிளம்பர் பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டு பணி அனுபவம் அல்லது இரண்டு ஆண்டுகள் அப்ரெண்டீஸ் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.59,600 வரை வழங்கப்படும்.
* காவலர்: 18 பணியிடங்கள்; தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.15,900- 50,400 வரை வழங்கப்படும்.
* கருணை இல்லம் காப்பாளர் (பெண்)1: சம்பளம்: ரூ.15,900- ரூ.50,400-வரை- தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
* துப்புரவு பணியாளர்: 27
* கால்நடை பராமரிப்பு (கோசாலை): 2
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.10,000- 31,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பதாரருக்கான பிற நிபந்தனைகள்:
* விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
* இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
* நேரடி நியமனம் இந்துசமயஅறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
* வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் https://rameswaramramanathar.hrce.tn.gov.in/மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
www.hrce.tn.gov.in w https://rameswaramramanathar.hrce.tn.gov.in/உள்ள விண்ணப்படிவம் அல்லாது வேறு வடிவில் தட்டச்சு செய்தோ/நகல் எடுத்தோ/வேறு வடிவங்களிலோ வரப்பெறும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
* ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
* தேர்வு செய்யப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும், உபநிறுவனங்களுக்கும் பணியிட மாறுதல் செய்யப்படுவார்.
* ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 12.03.2025 தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
* விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணமாக பிறப்பு சான்றிதழ் நகல் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்று (Transfer Certificate) / மதிப்பெண் சான்று (Mark Sheet) நகல் இணைக்கப்பட்ட வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?:
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் நேர்முக தேர்வுக்கு அழைப்பாணை அனுப்ப ரூ.25/-மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட (Self Address) அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். "மேலும் உரிய இணைப்புகள் மற்றும் சுய விலாசமிட்ட அஞ்சல் உறை இல்லாமல் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
* இதர விவரங்களை இத்திருக்கோயில் அலுவலக வேலை நாட்களில் அலுவலக www.hrce.tn.gov.in w https://rameswaramramanathar. hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,
இராமேசுவரம் - 623 526,
இராமநாதபுரம் மாவட்டம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications