இந்திய ரயில்வேயில் 3445 பணியிடங்கள்.. வெளியான சூப்பர் அறிவிப்பு.. சம்பளம், தகுதி முழு விவரம்
டெல்லி: இந்திய ரயில்வேயில் கமெர்சியல் கம் டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க், மற்றும் பயிற்சி கிளார்க் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3445 பணியிடங்கள் ரயில்வேயில் புதிதாக நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் வேலைக்கு சேர வேண்டும் என்று பலருக்கும் கனவு இருக்கும்.. அப்படி கனவுடன் இருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு உருவாகி உள்ளது. ரயில்வேயில் பல்வேறு மண்டலங்களில் காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி ) சார்பில் இன்று (செப்டம்பர் 21) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலிபணியிடங்கள்: 3445
கமெர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணியிடம்: 2022
கமெர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணிக்கு 18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வழக்கமான வயது தளர்வுடன் கொரோனா காலம் காரணமாக 3 ஆண்டுகள் வரை வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம் ஆரம்ப நிலை : 21700 ரூபாய் (லெவல் 3)
அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க், மற்றும் பயிற்சி கிளார்க் பணியிடங்கள்: 19900
அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க், மற்றும் பயிற்சி கிளார்க் பதவிகளுக்கு 18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வழக்கமான வயது தளர்வுடன் கொரோனா காலம் காரணமாக 3 ஆண்டுகள் வரை வயது சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் ஆரம்ப நிலை : 19900 ரூபாய் (லெவல் 2)
விண்ணப்பிப்பது எப்படி: சென்னை, அஹமதாபாத், பெங்களூர், முஸாபர்நகர், கொல்கத்தா, புவனேஸ்வர், திருவனந்தபுரம், மும்பை , சண்டிகர், சிலிகுரி, செகந்திராபாத், ராஞ்சி, பிரக்யாராஜ், பட்னா, மால்டா, சண்டிகர், பிலாஸ்பூர், குவஹாத்தி, கோரக்பூர், ஜம்மு ஸ்ரீநகர், சிலிகுரி உள்பட மண்டல அலுவலகங்களுக்கு தனித்தனியாக உள்ள ஆர்ஆர்பி தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 21.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2024
கல்வி தகுதி , முழு சம்பள விவரம் மற்றும் தகுதிகள் உள்பட முழு விவரங்களை https://www.rrbapply.gov.in/என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அல்லது செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் விவரமாக பார்க்கலாம். எந்த காரணம் கொண்டு அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் விண்ணப்பித்து ஏமாற வேண்டாம் என்றும், பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று வரும் புரோக்கர்களையும் நம்ப வேண்டாம் என்றும் ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications