ஆதார் சேவை மையத்தில் வேலை.. சூப்பர்வைசர் பணியிடங்கள்.. பிளஸ் டூ தகுதி தான்.. தூள் கிளப்புங்க
சென்னை: ஆதார் சேவை மையத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர் / ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 204 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
ஆதார் சேவை மையத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர் / ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 204 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆதார் நிறுவனத்தின் இணைந்து இயங்கும் CSC e-Governance Services India Ltd இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
தமிழ்நாடு 05, ஆந்திரப் பிரதேசம்-11, அசாம்-05, லடாக் 01, பீகார் 02, சண்டிகர் 01, சத்தீஸ்கர் 12,
கோவா 01, குஜராத் 10, ஹரியானா 03, ஜம்மு மற்றும் காஷ்மீர் 09, ஜார்கண்ட்05, கர்நாடகா 03, கேரளா 18,
மத்திய பிரதேசம் 32, மகாராஷ்டிரா 19, மேகாலயா 01, நாகாலாந்து 01, ஒடிசா 09, புதுச்சேரி 01,
பஞ்சாப் 13, ராஜஸ்தான் 07, சிக்கிம் 01, , தெலுங்கானா 08, திரிபுரா, 01 உத்தரப்பிரதேசம், 15 உத்தரகாண்ட் -04, மேற்கு வங்கம் 05 என மொத்தம் 204 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். டிசிஏ முகமையால் வழங்கப்பட்ட ஆதார் நிறுவனம் வழங்கிய ஆதார் ஆபரேட்டர் / சூப்பர்வைசர் சான்றிதழ் வைத்து இருப்பது கட்டாயம். தேர்வர்கள் கல்வி தகுதி மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 20,000 சம்பளம் வழங்கப்படும். நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 01.07.2025 ஆகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2025 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் https://csc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications