Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

490 காலியிடங்கள்.. மாதஊதியம் ரூ.40,000 முதல் ரூ.1.40 வரை.. விமான ஆணையத்தில் அசத்தலான வேலை.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விமான ஆணையத்தில் காலியாக உள்ள 490 ஜுனியர் எக்ஸிக்கியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய விமான ஆணையம் (Airports Authority Of India or AAI) இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

 AAI recruitment 2024 for 490 junior Executive post salary from Rs.40,000 to Rs.1.40 lakh

அதன் விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரிவில் மொத்தம் 490 பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இந்த பணிகளுக்கு 5 பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட இருக்கிறது. அதன்படி Junior Executive (Architecture) பிரிவுக்கு 3 பேர், Junior Executive (Engineering-Civil) பிரிவுக்கு 90 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். Junior Executive (Engineering-Electrical) பிரிவுக்கு 106 பேர், Junior Executive (Electronics) பிரிவுக்கு 278 பேர், Junior Executive (Information Technology) பிரிவுக்கு 13 பேர் என மொத்தம் 490 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.05.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வுகள் உண்டு. அரசு விதிகளின் படி மற்றவர்களுக்கு அதிகபட்சமாக 10 வயது வரையும் வயது தளர்வு வழங்கப்படும்.

கல்வி தகுதி: ஜுனியர் எக்ஸிக்கியூட்டிவ் (ஆர்க்கிடெக்சர்) பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் ஆர்க்கிடெக்சர் மற்றும் பிளானிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜுனியர் எக்ஸிக்கியூட்டிவ் (என்ஜினீயரிங் சிவில்) பணிக்கு சிவில் என்ஜினீயரிங், ஜுனியர் எக்ஸிக்கியூட்டிவ் (என்ஜினீயரிங் -எலக்ட்ரிக்கல்) பணிக்கு எலக்ட்ரிக்கல் பிரிவில் என்ஜினீயரிங் படிப்பையும், ஜுனியர் எக்ஸிக்கியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும் ஜுனியர் எக்ஸிக்கியூட்டிவ் (இன்பர்மேஷன் டெக்னாலஜி) பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுதவிர சம்பந்தப்பட்ட துறையில் பிஎஸ்சி என்ஜினீயரிங் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

மாத சம்பளம்: இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். பணியில் இணைந்தவுடன் முதல் மாதமே இந்த சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.aai.aero எனும் இணையதளம் மூலம் மே மாதம் 1ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் Short List செய்யப்பட்டு GATE மதிப்பெண் அடிப்படையில் அழைக்கப்பட்டு நேர்க்காணல் நடத்தப்பட்டு சான்று சரிபார்ப்புக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+