விமான நிலையங்களில் வேலை.. கை நிறைய சம்பளம்! செம சான்ஸ்.. தேதி முடிய போகுது.. மிஸ் பண்ணிடாதீங்க
செனை: இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் காலியாக உள்ள 342 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 04 ஆம் தேதியுடன் முடிகிறது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை நிர்வகிக்கும் பணியை இந்திய விமான நிலைய ஆணையம் செய்து வருகிறது. விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த விமான நிலையத்தில் 342 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம்

காலிப்பணியிடங்கள்: ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (அலுவலலகம்)-09 பணியிடங்கள், சீனியர் அஸ்சிஸ்டண்ட் (அக்கவுண்ட்ஸ்)09 பணியிடஙக்ள், ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் (காமன் கேடர்) -237 பணியிடங்கள், ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் (நிதி) -66 பணியிடங்கள், சட்டம் 18 பணியிடங்கள், ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் (ஃபயர் சர்வீஸ்) 03 பணியிடங்கள் என மொத்தம் 323 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
சம்பளம் எவ்வளவு: இளநிலை நிர்வாக அதிகாரி (ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் -ஆபிஸ்) பணிக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம், இளநிலை உதவியாளர்(அக்கவுண்ட்ஸ்) பணிக்கு ரூ.36,000 முதல் ரூ.1,10,000 வரை ஊதியமும் ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் (காமன் கேடர்) பதவிக்கு ரூ.31,000 முதல் ரூ.92,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி என்ன?: ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (அலுவலகம்) பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். அக்கவுண்ட்ஸ் பணிக்கு துறைசார்ந்த பட்டப்படிப்பு அவசியம். ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (காமன் கேடர்) பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். இளநிலை உதவியாளர் (சட்டம்) பணியிடத்திற்கு சட்ட படிப்பு முடித்து இருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் (தீ அணைப்பு சேவைகள்) பணியிடத்திற்கு துறை சார்ந்த பொறியியல் பட்டம் முடித்து இருக்கவேண்டும்.
வயது வரம்பு: இளநிலை உதவியாளர் (அலுவலகம்), மற்றும் சீனியர் அஸ்சிஸ்டண்ட் (அக்கவுண்ட்ஸ்) ஆகிய பணியிடங்களுக்கு 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது. பிற பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 27 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதார்ர்கள் வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.aai.aero என்ற இணையதளத்திற்கு சென்று கேட்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
ஆன்லைன் முறையில் நடபெறும் எழுத்து தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.aai.aero/en/careers/recruitment என்ற இணையபக்கத்தில் சென்று தேவையான விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications