என்ஜினீயரிங் முடிச்சிருக்கீங்களா.. ஏர்போர்ட் ஆணையத்தில் செம வேலை.. மாதம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 496 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டின் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாடு முதல் விமான போக்குவரத்து சார்ந்த பணிகளில் காலியாகும் பணியிடங்களை இந்த ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு -Air Traffic Control) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம் உள்ளிட்ட தெளிவான விவரங்களை கீழே பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணிக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 496 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து இயற்பியல் மற்றும் கணக்கு பாடங்களுடன் கூடிய பி.எஸ்.சி (சயின்ஸ்) பட்டம் முடித்து இருக்க வேண்டும். ஆங்கிலம் எழுதவும் பேசவும் தெரிந்து இருக்க வேண்டும். பி.இ/ பி.டெக், / பி.எஸ்.சி . (Engg.) ஆகிய பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து தேர்வர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 30.11.2023 அன்றைய தேதிப்படி 27 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். எனினும், எஸ்.சி./எஸ்,டி பிரிவினர், பெண்கள், அப்ரெண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 01.11.2023 . விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023 ஆகும். வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aai.aero/en/recruitment/release/383257 என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 40,000 - 3% - 1,40,000- வரை கிடைக்கும். ஆண்டுக்கு தோராயமாக ரூ.13 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கும். மத்திய அரசு விதிகளின் படி இதர சலுகைகளும் உண்டு.
தேர்வு முறை: கணிணி வழி தேர்வு நடைபெறும். நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. கட் ஆஃப் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications