மாத சம்பளம் ரூ.43,000.. கோவை ஆவினில் அசத்தலான வேலைவாய்ப்பு.. நோ எக்ஸாம்! நேர்க்காணல் மட்டுமே!
கோவை: கோவை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ட் பணியிடங்கள் எக்ஸாம் இன்றி நேர்க்காணல் முறையில் மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது.

தற்போது கோவை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்விபரம் வருமாறு:
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) படித்திருப்பதோடு, கம்யூட்டர் பயன்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Transport செலவுக்காக ரூ.8 ஆயிரம், Incentives ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதன்மூலம் மாதசம்பளமாக ரூ.43 ஆயிரம் வரை கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் மட்டுமே உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான நேர்க்காணல் என்பது New Dairy Complex, Pachaplayam, Kalampalayam (Po), Perur (Via), Coimbatore 641 0101 என்ற முகவரியில் வரும் 14ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இது ஒரு தற்காலிக பணியாகும். இவ்வாறு பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2024 ஜூலை 31ம் தேதி வரை பணியில் அமர்த்தப்படுவார்கள்.
நேர்க்காணலுக்கு செல்வோர் தங்களின் பயோடேட்டா, சுயசான்றொப்பமிட்ட கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாகும். தேர்வாகும் நபர்கள் 2024 மே மாதம் 31ம் தேதி வரை பணி செய்ய முடியும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications