நோ எக்ஸாம்.. நேர்க்காணல் மட்டுமே.. மாத ஊதியம் ரூ.43,000.. தேனி ஆவினில் சூப்பர் வேலை.. ரெடியா?
தேனி: தேனி மாவட்ட ஆவினில் தேர்வு எதுவுமின்றி, நேர்க்காணல் முறையில் வெட்னரி கன்சல்டன்ட் பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாதம் ரூ.43,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பால்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தான் தற்போது தேனி மாவட்ட ஆவினில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ட் (கால்நடை ஆலோசகர்) பணியிடத்துக்கான ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பணிக்கு இளங்கலை பிரிவில் வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி (B.V.Sc. & A.H) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து, கம்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Transport செலவுக்காக ரூ.8 ஆயிரம், Incentives ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதன்மூலம் மாதசம்பளமாக ரூ.43 ஆயிரம் வரை கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 21 வயதும், அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பம் செய்வோர் கார் அல்லது இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் மட்டுமே உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
பணிக்கான நேர்க்காணல் என்பது வரும் 13ம் தேதி காலை 10 மணிக்கு General Manager, Theni District Cooperative Milk Producer's Union Ltd, Theni என்ற முகவரியில் நடைபெற உள்ளது. நேர்க்காணலுக்கு செல்வோர் தங்களின் பயோடேட்டா, சுயசான்றொப்பமிட்ட கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாகும். அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் 9 மாதம் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்கள் தேவையை பொறுத்து பணி நீட்டிப்பு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications