மாதம் ரூ.2.50 லட்சம் வரை சம்பளம்.. ஆவினில் வெளியான புதிய வேலைவாய்ப்பு! நல்ல சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் இருந்து மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் உள்பட பல்வேறு பணிக்கான புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லிமிடெட் (Tamil Nadu Cooperative Milk Producer's Federation Limited அல்லது TCMPF Limited) இயங்கி வருகிறது.

aavin job jobs

இந்நிலையில் தான் ஆவினின் இந்த கூட்டமைப்பு சார்பில் மாவட்ட வாரியாக பணிக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

Marketing Consultant: மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு ஏதேனும் டிகிரி முடித்து எம்பிஏ படிப்பை படித்திருக்க வேண்டும். லீடிங் எம்எம்சிஜி நிறுவனத்தில் சேல்ஸ், மார்க்கெட்டிங்கில் 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மாதசம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் செய்வோர் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Logistics Consultant: அதேபோல் லாஜிஸ்டிக்ஸ் கன்சல்டன்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்பிஏ பிரிவில் லாஜிஸ்டிக்ஸ் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும் லாஜிஸ்ட்டிக் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் பிரிவில் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.1.20 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Consultant: கன்சல்டன்ட் (டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன்) பணிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிஇ, பிடெக் அல்லது எம்இ, எம்டெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு இஆர்பி ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் நிறுவனங்களில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Financial Mangement Analyst: பைனான்ஸ் மேனேஜ்மென்ட் அனலிஸ்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு எம்பிஏ பைனான்ஸ் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிஏ இறுதி தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் குறிப்பிட்ட பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Application Developer: அப்ளிகேஷன் டெவலப்பர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு அப்ளிகேஷன் டெவலப்பர் பணியில் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், ஸ்பிரிங், ஃஎப்டிஎல் மற்றும் ப்ரேம் வொர்க்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கான விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 1.1.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், எம்பிசி அல்லது பிசி பிரிவினருக்கு 2 ஆண்டு வரையும் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை வயது தளர்வு உள்ளது. முன்னாள் படை வீரர்களுக்கும் விதிகளின்படி வயது தளர்வு உண்டு.

இந்த பணி தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையிலானது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மேற்கூறிய சம்பளத்துடன் TA மற்றும் DA வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆவின் இணையதளம் சென்று விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களோடு ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.500 செலுத்தினால் போதுமானது. விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முகவரி கீழே இணைக்கப்பட்டுள்ள

விண்ணப்பங்களை ‛‛Managing Director, The Tamilnadu Cooperative Milk Producers' Federation Limited, No.3A, pasumpon Muthuramlinganar Salai, (Chamiers Road), Aavin Illam,Nandanam, Chennai 600 035 என்ற முகவரிக்கு ரிஜிஸ்டர் போஸ்ட் அல்லது விரைவு தபால் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது போல் அனுப்பி வைக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] முகவரி மூலம் தீர்த்து கொள்ளலாம்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+