ஆவினில் சூப்பர் வேலை.. இன்ஜினியரிங், எம்பிஏ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.2.50 லட்சம் வரை சம்பளம்
சென்னை: ஆவின் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர், மார்க்கெட்டிங் கன்சல்டன்ட், அப்ளிகேஷன் டெவலப்பர் உள்பட 6 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.1.20 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லிமிடெட் (Tamil Nadu Cooperative Milk Producer's Federation Limited அல்லது TCMPF Limited) இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் ஆவினின் இந்த கூட்டமைப்பு சார்பில் 6 வகையான பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
ப்ராஜெக்ட் மேனேஜர்: Project Manager (Dairy Automation) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பிஇ, பிடெக் அல்லது எம்இ, எம்டெக் பிரிவில் மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் டிகிரி முடித்திருக்க வேண்டும். பால்பண்ணை சார்ந்த இன்டஸ்ட்ரியில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.
மார்க்கெட்டிங் கன்சல்டன்ட்: Marketing Consultant பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஏதேனும் டிகிரி முடித்து எம்பிஏ படிப்பை படித்திருக்க வேண்டும். சேல்ஸ், மார்க்கெட்டிங் பிரிவில் லீடிங் எம்எம்சிஜி நிறுவனங்களில் 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கும் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மாதசம்பளம் வழங்கப்பட உள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் கன்சல்டன்ட்: Logistics Constultant பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளது. எம்பிஏ பிரிவில் லாஜிஸ்டிக்ஸ் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும் லாஜிஸ்ட்டிக் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் பிரிவில் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.1.20 லட்சம் வழங்கப்படும்.
கன்சல்டன்ட்: Consultant (Digitel Tranformation) பணிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிஇ, பிடெக் அல்லது எம்இ, எம்டெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு இஆர்பி ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் நிறுவனங்களில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும்.
பைனான்ஸ் மேனேஜ்மென்ட் அனலிஸ்ட்: Financial Mangement Analyst பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு எம்பிஏ பைனான்ஸ் முடித்திருக்க வேண்டம். இல்லாவிட்டால் சிஏ இறுதி தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் குறிப்பிட்ட பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும்.
அப்ளிகேஷன் டெவலப்பர்: Application Developer பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பைமுடித்திருக்க வேண்டும். அதோடு அப்ளிகேஷன் டெவலப்பர் பணியில் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், ஸ்பிரிங், ஃஎப்டிஎல் மற்றும் பிரேம் வொர்க்ஸ் உள்ளிட்டவை தெரிந்திரக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: அதோடு மாதசம்பளம் தவிர TA மற்றும் DA வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அனைவரின் வயதும் 45க்குள் இருக்க வேண்டும். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். வயது என்பது 1.1.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், எம்பிசி அல்லது பிசி பிரிவினருக்கு 2 ஆண்டு வரையும் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை வயது தளர்வு உள்ளது. முன்னாள் படை வீரர்களுக்கும் விதிகளின்படி வயது தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் கொண்ட பணி அனுபவம், திறமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆவின் இணையதளம் சென்று விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களோடு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்ய ஜுன் மாதம் 27 ம் தேதி மாலை 5.30 மணி கடைசி நாளாகும். இந்த கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை ‛‛Managing Director, The Tamilnadu Cooperative Milk Producers' Federation Limited, No.3A, pasumpon Muthuramlinganar Salai, (Chamiers Road), Aavin Illam,Nandanam, Chennai 600 035 என்ற முகவரிக்கு ரிஜிஸ்டர் போஸ்ட் அல்லது விரைவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
சந்தேகம் தீர்ப்பது எப்படி: மேலும் பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.500 செலுத்தினால் போதுமானது. விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முகவரி கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக உள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் பணி நேரமான காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் 044 - 23464500 , 044 - 23464503 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications