தேர்வு இல்லை! நேர்க்காணல் மட்டுமே! மாதஊதியம் ரூ.43,000.. திருப்பத்தூர் ஆவினில் அசத்தலான வேலைவாய்ப்பு
திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆவின் பணியிடங்கள் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணியிடம் தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்பப்பட உள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் ஒன்று ஆவின். இது தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது திருப்பத்தூர் மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள ஒரு வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணியிடத்தை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாகும். தேர்வாகும் நபர்கள் ஓராண்டு பணியமர்த்தப்படுவார்கள். மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Individual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும்.
இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் மட்டுமே உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் வரும் 14ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பயோடேட்டா, சுயசான்றொப்பமிட்ட கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். நேர்க்காணல் என்பது
Administrative Office, Tirupathur DMPU Ltd., (Aavin) 5th Floor-BLock A1, A2 & A3, Collector Office Campus, Tirupathur District - 635 601 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. தொடர்பு எண் : 9444672809.












Click it and Unblock the Notifications