நோ எக்ஸாம்.. நேர்க்காணல் மட்டுமே.. மாத சம்பளம் ரூ.43,000.. கோவை ஆவினில் அசத்தலான வேலைவாய்ப்பு!
கோவை: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆவின் பணியிடங்கள் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் எக்ஸாம் இன்றி மாதம் ரூ.43 ஆயிரம் ஊதியத்தில் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் ஒன்று ஆவின். இது தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது கோவை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாகும். தேர்வாகும் நபர்கள் 2024 மே மாதம் 31ம் தேதி வரை பணி செய்ய முடியும். மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Individual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும்.
விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் மட்டுமே உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விறுப்பம் உள்ளவர்கள் தங்களின் பயோடேட்டா, சுயசான்றொப்பமிட்ட கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். நேர்க்காணல் என்பது Coimbatore District Co-operative Milk Producers Limited, Pachapalayam, Kalampalayam Post, Coimbatore-641010 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
-
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
செவ்வாழை கிலோ ரூ.60.. பொள்ளாச்சியில் சர்ப்ரைஸ்.. கிடுகிடுவென ஏறிய விலை! கோவை விவசாயிகளுக்கு ஜாக்பாட் -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்












Click it and Unblock the Notifications