‛‛பரிசு + ஐடி வேலை’’.. Accenture-ன் பெண்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக Hack Diva நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் இன்று நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்து போட்டியில் பங்கேற்போருக்கு Apple MacBook, Apple IPad, Samsung Smart Watch உள்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அதோடு திறமையானவர்கள் பணிக்கும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆக்சென்ச்சர் (Accenture) என்பது முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று. தமிழகத்தில் சென்னை, கோவையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் நம் நாட்டின் பல்வேற முக்கிய நகரங்களிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் அவ்வப்போது ஆக்சென்னசர் சார்பில் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக Hack Diva எனும் போட்டி நடத்தி பரிசுகளுடன் வேலைவாய்ப்பு என்று அளிக்கப்பட்டு வருகிறது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த Hack Diva போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஹேக் திவா போட்டிக்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்க இன்று (ஜுன் 30) நள்ளிரவு 11.59 மணிக்குள் பெண்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் செய்ய விரும்பும் பெண்கள் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ எம்எஸ்சி உள்ளிட்ட படிப்புகளை கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முடித்திருக்க வேண்டும். அதோடு இந்த படிப்பை 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். முதலாமாண்டு, 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு படிப்பவர்களும், ஆக்ச்சென்ச்சர் நிறுவனத்தில் பணியாற்றுவோரால் பங்கேற்க முடியாது.
இதில் பங்கேற்க விண்ணப்பம் செய்வது கட்டாயமாகும். விண்ணப்பம் செய்வோருக்கு ரவுண்ட் ஒன்று ஜுலை 1ம் தேதி நடக்கும். இது 90 நிமிட ஒரு எலிமினேட்டர் சுற்றாகும். இந்த சுற்றில் விண்ணப்பத்தாரர்கள் தங்களின் ப்ரோகிராமிங் லேங்குவேஜை தேர்வு செய்து விடையளிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுவோர் ஜுலை 14ம் தேதி நடக்கும் 2வது சுற்றில் பங்கேற்கலாம். இது செமி பைனல் சுற்றலாகும். இது 120 நிமிடங்கள் வரை நடக்கம். அதன்பிறகு பைனல் மற்றும் 3வது சுற்று என்பது 120 நிமிடங்கள் வரை நடக்கும். 2வது, 3வது சுற்று Coding அடிப்படையிலானது.
Tiem Efficiency, Memory Efficiency, Logical Correctness, Semantic Analysis என்ற 4 விஷயங்களை அடிப்படையாக கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முதலிடம் பிடிப்பவருக்கு Apple MacBook, 2ம் இடம் பிடிப்பவருக்கு Apple iPad, 3வது இடம் பிடிப்பவருக்கு Samsung Smart Watch, அடுத்த 10 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான கிப்ட் வவுச்சர் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விண்ணப்பம் செய்வோர் Accenture Fast-Track Recruitment Process மூலம் பணிக்கும் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப இன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே நேரம் இருக்கிறது என்பதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ள பெண்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications