Accenture வேலைவாய்ப்பு.. வாரத்தில் 2 நாள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்! சென்னையிலேயே நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐடி துறையில் முன்னணியில் செயல்பட்டு வரும் ஆக்சென்ச்சர் சார்பில் சென்னை நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். 3 நாட்கள் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆக்சென்ச்சர் (Accenture) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மொபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளோட்ஸ் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கி வருகிறது.

it jobs job jobs

இந்த நிறுவனத்தின் கிளைகள் நம் நாட்டிலும் உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்னை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் தற்போது Application Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 12ம் வகுப்பு முடித்து ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு Microsoft Dynamics CRM Technical தெரிந்திருக்க வேண்டும்.

இதுதவிர Microsoft Azure-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட இந்த பணியில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் அப்ளிகேஷன் டிசைன், பில்ட் மற்றும் கான்ஃபிகர் செய்ய வேண்டி இருக்கும். மேலும் டீமை தலைமையேற்று வழிநடத்தி குறித்த காலத்தில் புராஜெக்ட்டை முடித்து வழங்க வேண்டிருக்கும் என வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் பணிக்கான இண்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இது Hybrid வகை வேலையாகும். இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்றால் போதும். 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது..

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+