Accenture ஐடி நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு.. கோவையில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

கோவை: Accenture ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கோவை ஆக்சென்ச்சர் ஐடி நிறுவனத்தில் உள்ள பணி குறித்த முக்கிய அறிவிப்புகள் வந்துள்ளன. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆக்சென்ச்சர் (Accenture) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மெபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளோட்ஸ் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கி வருகிறது.

it jobs job jobs

இந்த நிறுவனத்திற்கு நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன. பெங்களூர், ஹைதராபாத், மும்பை, தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கோவை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி Application Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் குறிப்பிட்ட பிரிவில் ஏழரை ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

டெக்னிக்கல் ஸ்கில்ஸை பொறுத்தவரை Selenium கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் டூல்ஸ், சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் (SDLC or Software Development Life Cycle) புரிந்திருக்க வேண்டும். மேலும் ஜாவா அல்லது பைத்தான் ஆகிய ப்ரோகிராமிங் லேங்குவேஜில் ஒன்றை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் திறமை, சாப்ட்வேர் டெவலப்மென்ட்டில் ஏற்படும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்க்கும் தன்மையை பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் பற்றி தேர்வாகும்போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்கள் பணி தொடர்பான விபரங்களை ஹைதராபாத்தில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்துக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+