"3 நாள் ஆபீஸ் + 2 நாள் வீடு".. Accenture ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. கோவையிலேயே பணி
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் Accenture நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் Hybrid முறையில் வாரத்தில் 2 நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து பணியாற்றலாம்.
தற்போது ஐடி வேலையை பலரும் விரும்புகின்றனர். இதற்கு ஏற்ப தமிழகத்தில் உள்ள பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை நகரங்களில் ஆக்ச்சென்ச்சர் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கோவையில் ஆக்ச்சென்ச்சர் நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி கோவை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் லீட் (Application Lead) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்மென்ட் (JavaFull Stack Development), ஆங்குலர் (Angular) நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஸ்பிரிங்புட் (Spring Boot) கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். Spring Boot-ல் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் திறமை இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் பற்றி தேர்வாகும்போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் Hybrid முறையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்றால் போதும். மீதமுள்ள 2 நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications