Accenture ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. வந்தாச்சு புதிய அறிவிப்பு.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). தமிழகத்தில் சென்னை, கோவை, கர்நாடகாவில் பெங்களூர், தெலுங்கானாவில் ஹைதராபாத், மத்திய பிரதேசத்தில் இந்தூர், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, மகாராஷ்டிராவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job

இந்நிலையில் தான் ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் (Application Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்பான துறையில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னிக்கல் ரீதியாக பார்த்தால் React.js-ல் நன்கு அறிந்து இருக்க வேண்டும். Redux, Node.js மற்றும் GrapQl உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் Debugging toolsகளான Chrome DevTools மற்றும் React Developer Tools-ல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

எச்டிஎம்எல் (HTML), சிஎஸ்எஸ் (CSS) மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) உள்ளிட்ட வெப் டெவலப்மென்ட் கான்செப்ட்டுகளை புரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் React.js பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். அதோடு React.js-ல் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்? அவர்களின் சம்பளம் என்ன? என்பது பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+