அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டுமே போதும்.. Accenture ஐடி நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). தமிழகத்தில் சென்னை, கோவை, கர்நாடகாவில் பெங்களூர், தெலுங்கானாவில் ஹைதராபாத், மத்திய பிரதேசத்தில் இந்தூர், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, மகாராஷ்டிராவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெக் சப்போர்ட் பிராக்டிசனர் (Application Tech Support Practitioner) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 15 ஆண்டு முழுமையாக கல்வி தகுதியை முடித்திருக்க வேண்டும். அதாவது 12 ஆண்டுகள் பள்ளி படிப்பையும், 3 ஆண்டு கல்லூரி படிப்பையும் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இது ஒரு சப்போர்ட்டிங் ரோல் வகை பணியாகும். இதனால் இந்த பணிக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட பிரிவில் 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாமல் மேற்கூறிய திறமை இருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான ஆண்டு சம்பளம் அல்லது மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது. சம்பளம் குறித்த விபரம் என்பது கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications