பி.காம் போதும்.. Accenture ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. விண்ணப்பிக்க சூப்பர் வாய்ப்பு
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிகாம் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டில் முன்னணியில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களின் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகம் தவிர பெங்களூர், புனே, மும்பை, குர்கான், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் ஆர்டர் டூ கேஷ் ஆபரேஷன்ஸ் நியூ அசோசியேட் (Order to cash operations new associate) பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதோடு 0 முதல் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதாவது கலெக் ஷன் ப்ராசசிங், அக்கவுண்ட் மேனேஜ்மென்ட், கிரெடிட் மேனேஜ்மென்ட் மற்றும் அசஸ்மென்ட், ஓடிசி, பைனான்ஸ் ஸ்ரட்டஜி, மேனேஜ் மல்டிபிள் ஸ்டாக்ஹோல்டர்ஸ், புதிய விஷயங்களை வேகமாக கற்றல் உள்ளிட்ட திறமை கொண்டிருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரமும் கூறப்படவில்லை. இருப்பினும் திறமை, அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்ச்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று தவறாமல் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்கள் குர்கானில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications