Accenture வேலைவாய்ப்பு.. டிகிரி மட்டுமே போதும்.. நல்ல சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களின் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகம் தவிர பெங்களூர், புனே, மும்பை, குர்கிராம், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி குவாலிட்டி என்ஜினியர் (டெஸ்டர் - Quality Engineer - Tester) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். Selenium, Appium உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆட்டோமேடெஸ்ட் ஸ்கிரிப்ட் உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.
அதோடு Functional test Planning தெரிந்திருக்க வேண்டும். 0 முதல் 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. வேலைக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆனாலும் பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரமும் கூறப்படவில்லை. இருப்பினும் திறமை, அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்ச்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று தவறாமல் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Accenture நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications