Accenture வேலைவாய்ப்பு.. சென்னை, கோவையிலேயே பணியாற்றலாம்! ஆண்டுக்கு ரூ.4.60 லட்சம் சம்பளம்
சென்னை: சென்னை, கோவை உள்பட இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் Accenture ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ4.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்களில் முன்னணியில் இருப்பதில் ஒன்று தான் ஆக்சென்ச்சர் (Accenture). தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களின் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் சென்னை, கோவை, பெங்களூர், புனே, மும்பை, குர்கிராம், கொல்கத்தா, இ்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி அசோசியேட் சாப்ட்வேர் என்ஜினியர் (Associate Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ. 4 லட்சத்து 60 ஆயிரத்து 700 வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதுவும் 2023 அல்லது 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் எதுவும் இருக்க கூடாது. அதோடு கடந்த 3 மாதத்தில் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் நேர்க்காணலில் பங்கேற்று இருக்க கூடாது.
அதுமட்டுமின்றி விண்ணப்பத்தாரர்கள் பிரச்சனையை தீர்க்கும் திறன், நல்ல கம்யூனிகேசன் திறமை கொண்டிருக்க வேண்டும். HANA, DS, AMDP-யில் ஏபிஏபி டெவலப்மென்ட்டை புரிந்து வைத்திருக்க வேண்டும். J2EE மற்றும் Full Stack Development-ல் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் .NET(ASP.NET/ASP.NET MVC) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால்பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியாவின் எந்த பகுதியிலும் அதேவேளையில் 24X7 என்ற அடிப்படையில் எந்த ஷிப்ட்டில் வேண்டுமானாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு 0 - 11 மாத பணி அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். மேலும் எம்பிஏ, பிஜிடிபிஎம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Accenture நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications