IT வேலை தான் வேண்டுமா.. வந்தாச்சு சூப்பர் அறிவிப்பு.. பிரபல நிறுவனத்தில் அசத்தலான பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் அடோப்-பில் (Adobe) இருந்து சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு Adobe என்ற மல்டிநேஷனல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

வெப் டிசைன் டூல்ஸ், போட்டோ மனிபுலேஷன், வெக்டார் கிரியேஷன், ஆடியோ - வீடியோ எடிட்டிங், மொபைல் அப் டெவலப்மென்ட், அனிமேஷன் சாப்ட்வேர் உள்பட பல்வேறு துறைகளில் கால்பதித்து செயல்பட்டு வருகிறது.
இந்த அடோப் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் (Software Development Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதேபோல் வெப் அப்ளிகேஷனில் ஓராண்டு மேலாக பணி அனுபவம் அல்லது இன்டர்ன்ஷிப் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். டைப்ஸ்கிரிப்ட் (TypeScript), எச்டிஎம்எல் 5 (HTML 5), CSS 3 உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டிசைன் டெக்னிக்ஸ் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஜாவா ஸ்கிரிப்ட்டின் ஃபண்டமென்டல்ஸ், வெப் கான்செப்ட்ஸ் மற்றும் ஃப்ரண்ட் எண்ட் பிரேம்வொர்க்ஸ் (ரியாக்ட் Preferred) தெரிந்திருந்தால் நல்லது.
அதேபோல் Git, RESTAPIs மற்றும் பில்ட்டூல்ஸ்(Build tools - Webpack, Vite) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகைளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, Debugging skills இருக்க வேண்டம். அதேபோல் புதிய டெக்னாலஜியை கற்கும் திறன் இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம்.
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் பற்றி தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களுக்கான வசதி மற்றும் மற்றவர்களுக்கான தங்கும் வசதி வேண்டும் என்றாலும் உடனடியாக [email protected] என்ற இணையதள முகவரி அல்லது 408 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications