முப்படைகளில் 46,000 காலியிடங்கள்.. சம்பளம் + 4வது ஆண்டில் ரூ.11.71 லட்சம் ஓய்வூதியம்.. 8 டூ 12 படித்தவர்களுக்கு சான்ஸ்
டெல்லி: நாடு முழுவதும் ராணுவம், விமானப்படை, கடற்படையில் காலியாக உள்ள 46,000 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கு, 8, 10, பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் பணி செய்யும் 4 ஆண்டுகளில் மாதசம்பளமும், 4 வது ஆண்டில் ஓய்வு பெறும்போது ரூ.11.71 லட்சம் ஓய்வூதியமாகவும் வழங்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய பாதுகாப்பு படைகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் பணியாற்றும் வகையில் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவம், கடற்படை, விமானப்படைகளுக்கு குறுகிய கால சேவைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 2026ம் ஆண்டில் 'அக்னிபாத்' திட்டத்தில் முப்படைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள், சம்பளம், கல்வி தகுதி உள்பட முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
46,000 காலியிடங்கள்
'அக்னிபாத்' திட்டத்தில் தற்போது முப்படைகளிலும் சேர்த்து மொத்தம் 46,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு வயது 17 முதல் 23க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் என்ன?
விண்ணப்பம் செய்வோர் உடற்தகுதி தேர்வு, உடற்திறன் (மெடிக்கல்) தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்பிறகு ராணுவ பயிற்சி வழங்கப்படும். சீருடை, பயண செலவு, தங்கும் செலவு, உள்ளிட்டவை வழங்கப்படும்.
பணியில் சேருவோருக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இது 2வது ஆண்டில் ரூ.23,100 ஆகவும், 3வது ஆண்டில் ரூ.25,580 ஆகவும், 4வது ஆண்டில் ரூ.28 ஆயிரம் வழங்கப்படும்.
அதன்பிறகு 4வது ஆண்டு முடிவில் ஓய்வூதியமாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். மொத்தமாக 4 ஆண்டில் அக்னிபாத் பணியில் சேர்ந்தால் ரூ.23,43,160 வரை கிடைக்கும்.
மத்திய பணிகளில் முன்னுரிமை
மேலும் 4 ஆண்டு பணி ஓய்வூக்கு பிறகு சிஆர்பிஎப், ரயில்வே போலீஸ், மத்திய தொழில்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, சுங்க மற்றும் கலால் வரித்துறை ,வனத்துறை, ஓஎன்ஜிசி, இந்தியன் ரயில்வே, மாநில போலீஸ் துறை, விமான நிலைய பணி, டோல்கேட் பணி உள்பட பல துறைகளின் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதுதவிர கடற்படை மற்றும் எச்ஏஎல், பிஇஎல், பிஇஎம்எல் உள்பட மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள 100 மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பணிகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை பயன்படுத்தி பணியில் சேர முடியும். இதனால் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் தனித்தனியாக வெளியாக உள்ளது. இதனால் முப்படைகளில் 'அக்னிபாத்' திட்டத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள 4 இணையதளங்கள் வழியாக விண்ணப்பம் செய்யலாம். முப்படைகளில் பணியில் சேர விரும்புவோர் முறையான அறிவிப்புகளை அறிந்து விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
Agnipath Site: Click Here
Indian Army: Click Here
Indian Navy: Click Here
Indian Air Force: Click Here
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications