தயாரா? நோ எக்ஸாம்.. இன்ட்ர்வியூ மட்டும் தான்.. கைநிறைய சம்பளம்.. அழைக்கும் ஏஐஇஎஸ்எல் நிறுவனம்!
டெல்லி: ஏஐஇஎஸ்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ, டிகிரி, பிஇ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்று பணியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் (Air India Engineering Services Limited or AIESL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்தின் அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் துறை சார்ந்த உதவிகள், தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட்டில் ஏர்கிராப்ட் டெக்னீசியன் என்ற பிரிவில் மொத்தம் 325 பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளது. இந்த பணியிடங்கள் ஏர்கிராப்ட் டெக்னீசியன் (Maintenance/ Overhaul), ஏர்க்கிராப்ட் டெக்னீசியன் (Avionics) (எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டல்/ரேடியோ), டெக்னீசியன்(ஐடிஐ), டெக்னீசியன் (எக்ஸ்ரே/என்டிடி) உள்ளிட்ட 4 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பை பொறுத்தமட்டில் ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் ஸ்டீரிம், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங், ஏர்க்கிராப் டிரெய்னிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஏர்க்கிராப்ட் டெக்னீசியன் (Avionics) (எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டல்/ரேடியோ) பணிகளுக்கு டிப்ளமோவில் ஏர்க்கிராப்ட் மெயின்டெனன்ஸ் என்ஜினீயரிங், அவினானிக்ஸ் ஸ்டீரிம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், ரேடியா, இன்ஸ்ட்ரூமென்டேசன் என்ஜினீயரிங், ஏர்க்கிராப்ட் எலக்ட்ரிக்கல் ஆர்டிபிசியர், ஏர் எலக்ட்ரிக்கல் ரேடியோ ஆர்டிபிசியர் படிப்புகளையும் முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் பிரிவில் பிட்டர், ஷீட் மெட்டல், கார்பென்ட்ர், அப்ஹோல்ஸ்ட்ரி, பெயிண்டர், வெல்டர், மெஷினிஸ்ட் பணிக்கு ஐடிஐ படிப்பையும், டெக்னீசியன் (எக்ஸ்ரே/என்டிடி) பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பிஎஸ்சி இயற்பியல், பிஇ/பிடெக்கில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிகஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது என்பது 01.03.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினரக்கு 5 வயது வரையும் தளர்வுகள் உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

நேர்க்காணல் எப்போது?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணி என்றால் மார்ச் 31ம் தேதியும், டெக்னீசியன் பணிகளுக்கு ஏப்ரல் 11ம் தேதியும் உரிய விண்ணப்பம், சான்றிதழுடன் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு Personal Department A-320 Avionics Complex, (Near New Custom House) IGI Airport Terminal-II, New Delhi -110037 என்ற முகவரியில் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். மேலும் விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எந்த கட்டணமும் கிடையாது. விண்ணப்ப கட்டணத்தை டிடியாக எடுத்து செலுத்த வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல், திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்க Click Here












Click it and Unblock the Notifications