AIIMS Jobs: வெறும் 10ஆவது படிச்சிருந்தால் போதும்! எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! சம்பளம் எவ்வளவு?
சென்னை: டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு முதல் பட்டம் படித்தவர்கள் வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனை எய்ம்ஸ் ஆகும். இது நாடு முழுவதும் புகழ் பெற்றது. இங்கு பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1353 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு வேலை தேடுபவர்களுக்கு இது எளிதாக இருக்கும். அதிலும் நாட்டின் முன்னணி மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிய நல்லதொரு வாய்ப்பாகவும் இருக்கும்.
இந்த எய்ம்ஸ் மருத்துவமனைகள் டெல்லி, பாட்னா, போபால், கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மதுரைக்கு அருகிலும் புதிய எய்ம்ஸ் வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிய 52 பணியிடங்களுக்கு 1353 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. உதவி நிர்வாக அதிகாரி, உதவி நிர்வாக உதவியாளர், இளைய நிர்வாக உதவியாளர், ஜூனியர் என்ஜினியர், கேஷியர், லேப் அசிஸ்டென்ட், டிரைவர், ஹவுஸ் கீப்பிங் பணி உள்ளிட்டவைகளில் காலிப்பணியிடம் உள்ளது.
இந்த பணிகளுக்கு கல்வித் தொகுதியாக 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங் படித்திருத்தல் வேண்டும். சம்பள விவரம்: உயர் பதவிக்கு ரூ 1.50 லட்சம், ஆரம்ப கட்ட பதவி என்றால் ரூ 18,000.
வயது வரம்பு 18 வயது முதல் 35 அல்லது 40 வயது வரை (பதவிகளுக்கேற்ப மாறுபடும்).
எஸ்சி அல்லது எஸ்டியாக இருந்தால் 5 ஆண்டுகளும் ஓபிசிக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
தேர்வு செய்வது எப்படி? கணினி வழி தேர்வு, திறனறி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி தேர்வு செய்யப்படுவர்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் ஓபிசி என்றால் ரூ 3000, எஸ்சி, எஸ்டி, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் என்றால் 2400 ரூபாய்.
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 2 ஆம் தேதி. தேர்வு நடத்தப்படும் தேதி டிசம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை.
aiimsexams.ac.in. என்ற இணையதளத்தில் AIIMS CRE 2025 என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்தை பூர்த்தி செய்யுங்கள்.
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications