AIIMS Job: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை.. 3,000+ பணியிடங்கள்.. நர்சுகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன கல்வித் தகுதிகள் வேண்டும் என்பனவற்றை இங்கு காணலாம்.
நாட்டின் உயரிய மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாக எய்ம்ஸ் உள்ளது. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆய்வுக்கழகமான எய்ம்ஸ் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை வேலை
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ளன. தமிழகத்தின் மதுரையிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் இருந்து மெகா வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நர்சிங் முடித்துவிட்டு பணிக்காக காத்து இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம், கல்வித் தகுதி:
நர்சிங் ஆபிசர்- மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதியை பொறுத்தவரை பிஎஸ்சி (ஹான்ஸ்) நர்சிங்/ பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி ( (Post-Certificate), மாநில அல்லது இந்திய நர்சிங் கவுன்சிலில் நர்ஸ் மற்றும் மிட்வைப் (செவிலியர் மற்றும் பிரசவ உதவியாளர்) ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேவையான கல்வித் தகுதியைப் பெற்ற பின்பு, குறைந்தது 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
16.03.2026 தேதிப்படி 18 வயது முத 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும்,
எஸ்சி /எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஒபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கும் 13 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும். அதாவது எஸ்சி /எஸ்டி பிரிவினர் என்றால் 35 வரை விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் என்றால் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் நர்சிங் பணியாளர்களுக்கு மத்திய அரசின் ஊதிய கமிஷன் 7-வது படி ரூ. 9,300 - 34,800 ஊதிய வரம்பில் சம்பளம் அளிக்கப்படும்.
தேர்வு முறை
தேர்வு முறையை பொறுத்தவரை நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்பு பொது தகுதித் தேர்வு (NORCET) நடைபெறும். அதாவது முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு அடிபடையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். பெண்கள் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.2,400 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவு 24.02.2026 முதல் 16.03.2026 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு நடைபெறும் நாள்:
முதல் நிலைத்தேர்வு- 11.04.2026 ( சனிக்கிழமை), மெயின் தேர்வு; 30.04.2026-ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications