மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை இருக்கு.. உடனே விண்ணப்பிங்க.. கல்வித்தகுதி.. சம்பளம்.. முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: எய்ம்ஸ் நிறுவனத்தில் உதவியாளர், ஸ்டெனோகிராபர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு பணியில் சேர ஆர்வமும் கல்வித் தகுதியும் உள்ளவர்கள் 30.08.2023க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

 AIIMS Madurai Recruitment 2023: AIIMS Madurai Job Notification Check the full details

லைப்ரரி இன்பர்மேசன் அசிஸ்டெண்ட் பதவி காலி இடம் 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Library Science or Library and information/ B.Sc. Degree and Bachelor Degree or Post Graduate Diploma in Library Science படித்திருக்க வேண்டும். 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 35,400.

லேப் டெக்னீசியன் பதவி காலி பணி இடம் : 1

இந்த பதவிக்கு B.Sc. in Medical Lab. Technology/ Diploma in Medical Lab. Technology படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 35,400

வார்டன் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை : 2

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய கல்வித்தகுதியாக இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் Diploma / Certificate in House Keeping / Material Management / Public Relations / Estate Management படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம். 30 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 35,400

ஸ்டெனோகிராபர் பதவி காலி இடம் 1

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 25,500

அப்பர் டிவிசன் கிளர்க் காலி இடங்கள் 2

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 25,500

லோயர் டிவிசன் கிளர்க் காலி இடம் 1

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 19,900. மத்திய அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://jipmer.edu.in/announcement/aiims-madurai-direct-recruitment-various-group-b-and-c-posts என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொது பிரிவு மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 1500, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 1200
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement%20of%20Various%20Gr%20B%20%26%20C%202023%20Madurai.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2023.

மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.08.2023 முதல் 30.08.2023 வரை AIIMS Madurai Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மதுரையில் பணியமர்த்தப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+