மதுரை எய்ம்ஸ் ஆட்சேர்ப்பு 2023 : என்னென்ன பதவிகள்.. எவ்வளவு சம்பளம்.. விண்ணப்பம் உள்ளே
புதுச்சேரி: மதுரை எய்ம்ஸ் இல் புதிதாக நிரப்பப்பட உள்ள பதிவாளர், உதவி தேர்வு கட்டுப்பாட்டாளர், கணக்கு அதிகாரி, உதவி நிர்வாக அதிகாரி , கிளார்க் உள்பட பல்வேறு காலி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புதுச்சேரி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தன்னாட்சி நிறுவனம் ஆகும். இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்பது பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் (PMSSY) கீழ், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்படும் புதிய AIIMS மற்றும் பெரும் சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையான ஜிப்மர், மதுரை (தமிழ்நாடு) எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வழிகாட்டி நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள AIIMSக்கு பின்வரும் பல்வேறு குரூப் A, B & C பணியிடங்களை (பிரதிநிதி அடிப்படையில்) நிரப்ப தகுதியான அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
காலியாக உள்ள பதவிகளின் பெயர் மற்றும் குரூப் வாரியக ஊதிய நிலவரம்(7வது ஊதிய குழு பரிந்துரைப்படி)
1. பதிவாளர் ஏ நிலை-12 (Registrar A Level-12) (₹78800-209200) 1
2. உதவிக் கட்டுப்பாட்டாளர் தேர்வு A நிலை-11 (Assistant Controller of
Examination A Level-11) (₹67700-208700) 1
3. கணக்கு அதிகாரி A நிலை-10 (Accounts Officer A Level-10 ) (₹56100-177500) 1
4. உதவி நிர்வாக அதிகாரி பி நிலை-7 (Assistant Administrative Officer B Level-7 ) (₹44900-142400) 1
5. நிர்வாக உதவியாளர் (N.S.) B நிலை-6 ( Executive Assistant (N.S.) B Level-6) (₹35400-112400) 1
6. தனிப்பட்ட உதவியாளர் பி நிலை-6 (Personal Assistant B Level-6 ) (₹35400-112400) 2
7. மேல் பிரிவு எழுத்தர் C நிலை-4 (Upper Division Clerk C Level-4 ) (₹25500-81100) 2
பதிவாளர் தொடங்கி மேல்பிரிவு எழுத்தர் வரை ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக கல்வி தகுதி மற்றும் அனுபவம் கண்டிப்பாக தேவையாகும.. இந்த செய்தியுடன் இணைக்கப்பட்ட பிடிஎப் பைலில் கல்வி தகுதி மற்றும் அனுபவத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பமும் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பம் மற்றும் முழு விவரங்களை https://jipmer.edu.in/announcement/recruitment-various-group-b-c-non-faculty-posts-deputation-basis-aiims-madurai என்ற பக்கத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். '
செய்தியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் எந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு, அதில்உங்கள் புகைப்படத்தை ஒட்டி, விண்ணப்பத்தை முழுயைமான பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை அட்டஸ்ட் செய்து கீழ் கண்ட புதுச்சேரி முகவரிக்கு தபால் முலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணபிக்க வேண்டிய முகவரி:
Dr. Kusa Kumar Saha,
Nodal Officer (AIIMS, Madurai),
Admin-I (Recruitment Cell),
JIPMER, Puducherry - 605 006.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications