ஏர் இந்தியா நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கு டெல்லியில் நேர்முகத்தேர்வு!
சென்னை: ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள விமான பணியாளர் பணியிடங்கள் 5 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
ஆண்கள்: 31
பெண்கள்: 30
வயதுவரம்பு: 01.12.2014 தேதியின்படி 20 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்து ஏதாவதொரு விமான நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.01.2015, 05.01.2015 இரு நாட்களும் நடைபெறும். அன்றைய தினம் காலை 9.30 மணிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: டெல்லி
சம்பள விகிதம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூபாய் 10000 உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குபின் 5 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அதன்பிறகு மாதம் ரூபாய் 35,000 வழங்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே "கிளிக்" செய்யவும்.
இதுபோன்ற, மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications