சனி + ஞாயிறு விடுமுறை.. சென்னை அமேசான் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னை அமேசான் நிறுவனத்தில் என்ஜினியரிங், டிகிரி முடித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும்.
அமேசான் என்பது மல்டிநேஷனல் டெக்னாலஜி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட துறைகளில் முன்னணியில் உள்ளது.

இந்த அமேசான் நிறுவனத்தின் சென்னை பெருங்குடியில் அமைந்துள்ளது. இங்குள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி சென்னை அமேசான் நிறுவனத்தில் அசோசியேட் குவாலிட்டி சர்வீஸ் (Asscoiate Quality Services- QS) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெஸ்ட் பிளான், ரிப்போர்ட்டிங் ரிசல்ட் உள்ளிட்டவை சரியான நேரத்துக்கு வழங்க வேண்டு இருக்கும்.
இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்சிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு பணி அனுபவம் இருந்தால் பிளஸ் பாயிண்டாகும். பணி அனுபவம் இல்லாவிட்டாலும் கூட விண்ணப்பம் செய்யலாம். அதோடு ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் வேர்ட் (Word), எக்ஸல் (Excel), ஐஇ (IE), ஃபயர்பாக்ஸ் (Firebox) உள்ளிட்டவை குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் காலை 8 மணி முதல் 5 மணி வரை பணியமர்ப்படுவார்கள். ஒருவேளை பணி நிமித்தமாக சில நேரங்களில் ஷிப்ட் நேரம் என்பது மாற்றம் செய்யப்படும்.
பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீக்லி ஆப் வழங்கப்படும். அவசர பணி, பிசினஸ் தொடர்பான கூடுதல் பணி என்றால் மட்டுமே இந்த நாட்களிலும் வேலை செய்ய வேண்டி இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் கூட பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் https://amazonvirtualhiring.hirepro.in/registration/incta/ju0f4/apply/?j=56434&e=12271 இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications