"வீட்டில் இருந்தே வேலை".. டிகிரி மட்டுமே போதும்.. Amazon ஐடி நிறுவனம் அசத்தலான வாய்ப்பு!
சென்னை: பிரபலமான அமேசான் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
அமேசான் நிறுவனம்.. ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்த அமேசான் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கர்நாடகாவில் பெங்களூர் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் அமேசான் நிறுவனத்தின் கீழ் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி குறித்த முழுவிபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் டேட்டா அசோசியேட் I (Data Associate)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் ப்ராடெக்ட்ஸ் மற்றும் அப்ளிகேஷனில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Excel-ல் பணியாற்ற தெரிந்திருந்தால் அது விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ் பாயிண்டாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆன்லைன் ரீடெயில் பற்றிய நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தினசரி பணிகளை அப்டேட் செய்ய வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். ஆனால் அவர்கள் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications