Amazon ஐடி நிறுவனத்தில் வேலை.. சென்னையிலேயே பணி.. செம வாய்ப்பு
சென்னை: பிரபலமான அமேசான் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அமேசான்.. நாம் அதிகம் கேள்விப்பட்டு இருக்கும் நிறுவனம். இந்த நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமேசான் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் இயங்கி வரும் அமேசான் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
சென்னை பெருங்குடியில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 3 வகையான பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி டிவைஸ் அசோசியேட் (Device Associate), குவாலிட்டி சர்வீசஸ் (Quality Services), ரீடர்ஸ் ஓபிஎஸ் (Reader Ops.) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். QA மெத்தோடோலஜி அண்ட் டூல்ஸ் (Methodology and Tools) தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெஸ்ட்டிங் அனுபவம் மற்றும் சான்றிதழ் படிப்பு முடித்திருந்தால் இன்னும் பிளஸ் பாயிண்டாகும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணி என்பது டெஸ்ட்டிங் சாப்ட்வேருக்கு தேவையான எக்ஸிக்கியூட் டெஸ்ட் கேசஸ் கொடுப்பது, அதில் உள்ள பிழைகளை திருத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டி இருக்கும். மேலும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் என்று இருதரப்பினரும் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications