டிகிரி முடித்தோருக்கு வாய்ப்பு.. Amazon ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. ரெடியா?
சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அமேசான் ஐடி நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
அமேசான்.. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஏஐ, ஆன்லைன் வர்த்தகம், Cloud Computing, ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீம்மிங் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

அமேசான் நிறுவனம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் இயங்கி வரும் அமேசான் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் டிவைஸ் அசோசியேட் (Device Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 0 -1 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு சில விஷயங்கள் தகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டிகிரி படிப்புடன் QA மெத்தோடோலஜி அண்ட் டூல்ஸ் (Methodology and Tools) தெரிந்திருக்க வேண்டும். ஏதாவது கேஜெட்ஸ் (Gadgets) அல்லது டிவைஸ் (Device) பயன்படுத்திய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் இதுதவிர சாப்ட்வேர் டெஸ்ட்டிங் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications