Amazon தரும் சூப்பர் ஆஃபர்.. சென்னை ஐடி நிறுவனத்தி்ல சூப்பர் வேலை..
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் அமேசான் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான தகுதி, விண்ணப்பம் செய்வது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
அமேசான்.. இந்த நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வரும் இந்த அமேசான் நிறுவனம் சென்னை பெருங்குடியிலும் செயல்படுகிறது. இந்நிலையில் தான் அமேசான் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் டிவைஸ் அசோசியேட் (Device Associate)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளநிலை பிரிவில் ஏதேனும் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் QA மெத்தோடோலஜி அண்ட் டூல்ஸ் (Methodology and Tools) தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெஸ்ட்டிங் அனுபவம் மற்றும் சான்றிதழ் படிப்பு முடித்திருந்தால் இன்னும் பிளஸ் பாயிண்டாகும். இதுதவிர சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட பிரிவில் 0 முதல் 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணிஅனுபவம் இல்லாமல் மேற்கூறிய தகுதி உள்ளவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என்று இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதனால் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications