‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. ஃபுல் டைம் + பார்ட் டைம் பணிக்கு அழைக்கும் அமேசான்! மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபலமான அமேசான் நிறுவனம் சார்பில் முழுநேரமாகவும், பார்ட்டைம் ஆகவும் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என்று இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்.

அமேசான்.. உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் என்பது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ என பல சர்வீஸ்களை கொடுக்கிறது.

it jobs jobs job

இந்த நிறுவனம் சென்னையை பொறுத்தவரை பெருங்குடியில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் அமேசான் நிறுவனத்துக்கு தமிழகத்தில் வீட்டில் இருந்தே பணி செய்வதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுபற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி அமேசான் நிறுவனத்தில் Virutual Customer Support Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தமிழகத்தை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு கல்வி தகுதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் விண்ணப்பத்தாரர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். வீட்டில் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும். இன்டர்நெட் வசதியை பொறுத்தமட்டில் 100 எம்பி டவுன்லோட் ஸ்பீட், 20 எம்பி அப்லோட் ஸ்பீடில் இருக்க வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான ஷிப்ட்டுகளில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இதுதவிரதேவை என்றால் அதிகாலை, நள்ளிரவு, வார விடுமுறை நாட்களிலும், கூடுதல் நேரமும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

இந்த பணியை பொறுத்தவரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம். வாரம் 40 மணிநேரம் (4X10hrs அல்லது 5X8hrs) வரை பணியாற்ற வேண்டி இருக்கும். மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் வாடிக்கையாளர்களுடன் போன், மெயில் மூலம் அவர்களின் ஆர்டர் மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்கள், பணம் செலுத்தும் முறை குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டி இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளம் தவிர மெடிக்கல் இன்சூரன்ஸ், பென்சன் வசதி, திறமையை வளர்த்து கொள்ள எக்ஸ்பர்ட் மூலம் பயிற்சியும் அளிக்கப்படும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+