Amazon வேலைவாய்ப்பு.. சென்னை - பெங்களூர் உள்பட 4 இடங்களில் குவிந்திருக்கும் வேலை.. ரெடியா?
சென்னை: அமேசானின் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் உள்பட 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், க்ளவ்ட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறை சர்வீஸ்கள் உள்ளிட்ட வெவ்வேறு சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது அமேசான் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
அமேசான் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் -I (Software Development Engineer I) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளநிலை அல்லது முதுநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஜினியரிங் அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபண்டமென்டல்களாக உள்ள ஆப்ஜெக்ட் ஒரியன்டட் டிசைன், அல்காரிதம் டிசைன், டேட்டா ஸ்ட்ரெக்ச்சர்ஸ், பிரச்சனைகளை தீர்க்குமு் திறன், காம்ப்ளிசிட்டி அனலிசிஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். புரோகிராமிங் லேங்குவேஜ்களான சி/சி++, பைத்தான், ஜாவா அல்லது Perl உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் டெக்னிக்கல் இன்டர்ன்ஷிப் முடித்திருந்திருந்தால் நல்லது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி உள்ளிட்ட 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
