அனுபவம் தேவையில்லை.. டிகிரி மட்டுமே போதும்.. Amazon நிறுவனத்தில் அசத்தலான வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள அமேசானில் இருந்து சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர்(Software Development Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகில் டாப் பணக்காரர்களில் ஒருவரான ‛ஜெப் பெசோஸ்' தான் இதன் நிறுவனர் ஆவார். அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங் உள்பட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வுருகிறது.

it jobs job

நம் நாட்டிலும் அமேசானுக்கு கிளை நிறுவனங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அமேசான் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

அமேசான் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் (Software Development Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் இளநிலை, முதுநிலை படிப்புகளை கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

புரோகிராமிங் லேங்குவேஜ்களான C/C++, Python, Java or Perl தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸின் அடிப்படையான அல்காரிதம்ஸ், object oriented design, data structures உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.

Preferred Qualifications ஆக டெக்னிக்கல் இன்டர்ன்ஷிப் அல்லது மேற்கூறிய பிரிவில் ஏதாவது ஒன்றில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+