‛‛பிரேக்பாஸ்ட் + லஞ்ச் + சம்பளம்’’.. பிரபல ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பெங்களூரில் இயங்கி வரும் அனக்கின் (Anakin) ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ‛‛பிரேக்பாஸ்ட் + லஞ்ச் + சம்பளம்'' வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் தான் இயங்கி வருகின்றன. அப்படியாக அனக்கின் (Anakin) எனும் ஐடி நிறுவனமும் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் அனக்கின் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி அனக்கின் நிறுவனத்தின் சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக பிடெக், எம்டெக், பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருந்தால் சிறப்பானது.
இந்த பணிக்கு 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது ஒரு ஆண்டு Internship அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் Backend Programming Languages அல்லது Full Stack உள்ளிட்டவற்றை நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு Beautiful Soup, Selenium, Scarpt தெரிந்திருக்க வேண்டும். எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றை புரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் Web crawling, Scraping Knowledge, Reverse Engineering, Rdis, Kubernotes, Django/Flask தெரிந்திருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் டெக்னீக்கல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேசன் திறமை வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுககு மெடிக்கல் இன்சூரன்ஸ் வசதி உண்டு. மேலும் பணியின்போது அவலகத்திலேயே காலை மற்றும மதிய உணவு வழங்கப்படும். இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் மற்றும் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்படலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications