நோ எக்ஸாம்.. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை.. மாதம் 70,000 சம்பளம்!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், திட்ட அதிகாரி, திட்ட மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த 1978 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் சி என். அண்ணா துரை அவர்களின் நினைவாக இப்பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக் கலை மற்றும் அறிவியல் துறைகளில் வழங்கப்படுகின்றன. சென்னை கிண்டியில் அமைந்துள்ள இதன் முதன்மை வளாகம் தவிர, குரோம்பேட் மற்றும் தரமணி பகுதிகளிலும் வளாகங்கள் உள்ளன.
பணியிடங்கள் விவரம்:
இதேபோன்று தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பிராஜெக்ட் சயிண்டிஸ்ட், புரோகிராம் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.
1. ஸ்டார்ட்அப் பருவ அமைப்பு திட்ட அதிகாரி (திட்ட அறிவியலாளர்) - 1 பணியிடம்
2. திட்ட மேலாளர் (திட்ட இணை II) - 1 பணியிடம்
3. திட்ட மேலாளர் (திட்ட இணை II) - 1 பணியிடம்
4. கணக்கு நிர்வாகி / டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் - பல்வேறு பணியிடங்கள்.
கல்வித் தகுதி:
* ஸ்டார்ட்அப் பருவ அமைப்பு திட்ட அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் Ph.D. முடித்து இருக்க வேண்டும். பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது.
* திட்ட மேலாளர் பணியிடங்களுக்கு எம்.இ, எம்.டெக் படித்து இருக்க வேண்டும்.
* திட்ட மேலாளர் (இணை) பணியிடங்களுக்கு பி.இ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு எதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். கல்வித்தகுதி குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் ஒருமுறை படித்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம் எவ்வளவு?
* திட்ட அறிவியலாளர்) - மாதம் ரூ.70,000
* திட்ட மேலாளர் (திட்ட இணை II) - ரூ.35,000/-
* திட்ட மேலாளர் (திட்ட இணை II) - ரூ.35,000/-
* கணக்கு நிர்வாகி / டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் - ரூ.24,000/-
விண்ணப்ப கட்டணம்:
* அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. * தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
* விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 31.10.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க கடைசி தேதி 14.11.2025 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.auced.com/recruitmentஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும், விண்ணப்பத்தின் நகலுடன் (hard copy), விரிவான சுயவிவரத்தையும், தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்து, கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Director, Centre for Entrepreneurship Development,
#302, Platinum Jubilee Building, 2nd Floor,
AC Tech campus, Anna University,
Chennai - 600025
குறிப்பு:
மூடப்பட்ட உறையில், "தற்காலிகப் பதவிக்கான விண்ணப்பம் - ___________" என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் 14 நவம்பர் 2025க்குள் வந்து சேரும்படி அனுப்பப்பட வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications