நல்ல சம்பளம்! உதவி பேராசிரியர் முதல் லைப்ரேரியன் வரை.. அண்ணா பல்கலைக்கழகத்தில் குவிந்திருக்கும் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதன் உறுப்பு கல்லூரிகளில் பல்வேறு துறைக்களில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள், உதவி லைப்ரேரியன் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்புவற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரியலூர், ஆரணி, திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோவில், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபரம் திருக்குவளை, திண்டிவனம், தூத்துக்குடி, திருச்சி, விழுப்பரத்தில் University College of Engineering செயல்பட்டு வருகிறது.

 Anna university college recruitment 2023 for Assistant Professor and Assistant Librarians

அதேபோல் கோவை, மதுரை, திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் Regional Campus உள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு;

காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 232 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் உதவி பேராசியர் பணிக்கு 4 பேர், சிவில் என்ஜினீயரிங் உதவி பேராசிரியர் பணிக்கு 30 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பஉதவி பேராசிரியர் பணிக்கு 35 பேர், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் உதவி பேராசிரியர் பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் பிரிவு உதவி பேராசிரியர் பணிக்கு 51 பேர், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு உதவி பேராசிரியர் பணிக்கு 29 பேர், கணித பாடத்துக்கான உதவி பேராசிரியர் பணிக்கு 17 பேர், மேனேஜ்மென்ட் சயின்சஸஅ உதவி பேராசிரியர் பணிக்கு 11 பேர், ஆங்கிலம் உதவி பேராசிரியர் பணிக்கு 3 பேர், உதவி லைப்ரேரியன் பணிக்கு 14 பேர், Physical Education பிரிவில் Assistant Directore பணிக்கு 13 பேர் என மொத்தம் 232 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: என்ஜினீயரிங் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்ற விரும்புவோர் அந்த துறை அல்லது அதற்கு நிகரான துறையில் பிஇ, பிடெக், பிஎஸ், எம்இ, எம்டெக், எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். கணித துறைக்கான உதவி பேராசிரியர் பணிக்கு பி.எஸ்சி பிஎட் கணிதம் முடித்து எம்எஸ்சி பிரிவில் கணிதம், அப்ளைட் கணிதம், பிஎச்டி முடித்திருக்க வேண்டு்ம.

மேனேஜ்மென்ட் சயின்சஸ் உதவி பேராசிரியர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருப்பதோடு பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அல்லது 2 ஆண்டு டிப்ளேமா மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில உதவி பேராசிரியர் பணிக்கு ஆங்கிலத்தில் பிஎச்டி முடித்திருக்க வேண்டும். அசிஸ்டென்ட் லைப்ரேரியர்ன பணிக்கு ஏதாவது பிரிவில் டிகிரி முடித்து முதுகலை படிப்பில் லைப்ரேரி சயின்ஸ், இன்பர்மேஷன் சயின்ஸ், டாக்குமென்ட்டேசன் சயின்ஸ் அல்லது லைப்ரேரி சம்பந்தப்பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். உடற்கல்வி உதவி இயக்குனர் பணிக்கு Physical Education and Sports or Physical Education or Sports Science படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு 7 வது ஊதிய கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி(ஏ)/எஸ்டி பிரிவினர் என்றால் விண்ணப்ப கட்டணம் என்பது ரூ.472 செலுத்தினால் போதும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 12ம் தேதி மாலை 5.30 மணிக்குள் https://www.annauniv.edu/ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்கள், இணைந்து டிசம்பர் 1மொ் தேதி மாலை 5.30 மணிக்குள் ‛‛Registrar, Anna University, Chennai - 600 025'' என்ற முவகரிக்கு விரைவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தபாலின் மேல்புறம் Application For the Post of என எழுதி விண்ணப்பம் செய்வதற்கான பதவி, துறை மற்றும் கோட் பெயரை குறிப்பிட வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+