நீங்க புத்திசாலியா இருந்தால்.. இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. ரொம்ப கஷ்டம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழ்நாடு முழுக்க நடந்தது. இந்த தேர்வில் பல சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் கேட்கப்பட்ட நீச்சல் குளம் பற்றிய கேள்வி ஒன்றை இங்கே பார்க்கலாம்.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II.இல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) 4 நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த தேர்வு முக்கியமான சில விஷயங்களை கற்றுக்கொடுத்து உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும்.. இதற்கு முன் இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்த முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கேள்விகள் பள்ளி பாட புத்தகங்களில் இருந்து மட்டும் கேட்கப்படவில்லை. அதற்கு வெளியில் இருந்தும் அதிகம் கேட்கப்பட்டன. யுபிஎஸ்சி தேர்வு போல பெரும்பாலான கேள்விகள் முழுக்க முழுக்க வெளியில் இருந்து கேட்கப்பட்டன. முன்பெல்லாம் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளை பள்ளி பாட புத்தகங்களை முழுமையாக படித்தாலே கொஞ்சம் நல்ல மார்க் எடுக்க முடியும். ஆனால் இந்த முறை நடந்த தேர்வு மிக கடினமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
கேள்வி: இதில் கேட்கப்பட்ட நீச்சல் குளம் பற்றிய கேள்வி ஒன்றை இங்கே பார்க்கலாம்.
A swimming bath is 24 m long and 15 m broad. When a number of men dive into the bath, the height of water rises by 1 cm. If the average volume of water displaced by each man be 0.1 m³, how many men are there in the bath?
(A) 32
(B) 36
(C) 42
(D) 46
(E) Answer not known
ஒரு நீச்சல் குளம் 24 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்கள் அந்தக் குளத்தில் குதிக்கும் போது, நீரின் உயரம் ஒரு செ.மீ உயர்கிறது. ஒரு ஆண் சராசரியாக வெளியேற்றும் நீரின் அளவு 0.1 மீ எனில் அந்த நீச்சல் குளத்தில் எத்தனை ஆண்கள் உள்ளனர்?
(A) 32
(B) 36
(C) 42
(D) 46
(E) விடை தெரியவில்லை
நீச்சல் குளத்தில் குளிக்கும் ஆண்களின் எண்ணிக்கையைக் கண்டறிய, ஆண்களால் இடம்பெயர்ந்த நீரின் அளவுக்கும் நீர்மட்ட உயர்வுக்கும் உள்ள தொடர்பைப் முதலில் கண்டறிய வேண்டும்..
படி 1:நீச்சல் குளத்தில் உள்ள மொத்த நீரின் Volumeயை முதலில் கண்டுபிடிப்போம்.
நீச்சல் குளம் 24 மீ நீளமும் 15 மீ அகலமும் கொண்டது. மேலும் நீர் 1 செமீ (அல்லது 0.01 மீ) உயருகிறது. எனவே, நீரின் Volumeஐ பின்வருமாறு அளவிடலாம்
நீரின் Volume= நீளம் × அகலம் × உயரம்
நீரின் Volume=24m×15m×0.01m=3.6m³
படி 2: எத்தனை ஆண்கள் இந்த நீரின் அளவை வெளியற்றினார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் இடம்பெயர்ந்த நீரின் சராசரி அளவு 0.1 m³ ஆகும். எனவே, குளிக்கும் ஆண்களின் எண்ணிக்கையை பின்வருமாறு கணக்கிடலாம்.
ஆண்களின் எண்ணிக்கை= ஒவ்வொரு மனிதனும் இடம்பெயர்ந்த தொகுதி/ மொத்த நீரின் Volume இடமாற்றம் = 3.6m³ / 0.1m³ = 36
இதனால், 36 ஆண்கள் குளித்துள்ளனர்.
எனவே சரியான விடை B) 36
நீங்களும் இந்த சரியான விடையை கண்டுபிடித்தீர்களா? அப்படி என்றால் சபாஷ்!
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications