ஓதுவார் பயிற்சிப்பள்ளியில் சேர உடனே விண்ணப்பிங்க - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

அர்ச்சகராக விரும்பும் 20 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நடத்தும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அர்ச்சகராக விரும்பும் 20 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நடத்தும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டு கால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டுகால சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 27ஆம் தேதி ஆகும்.

Apply immediately to join Oduvar Training School in Tiruvannamalai

தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூபாய் 3,000 உதவித்தொகை வழங்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சமய தீட்சை பெற்றவர்கள், சமயக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 13 வயதிற்கு மேல் 20 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இயற்கையாகவே நல்ல குரல் வளமும் உடல் வளமும் பெற்றிருக்க வேண்டும்.

Apply immediately to join Oduvar Training School in Tiruvannamalai

பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரைக் கொண்டு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும். பயிற்சி நிலையத்தில் பயில விரும்பும் மாணவர்கள் சமய கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும். கீழ்க்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+