சின்னப் பிள்ளைகள் அரசியல் என்ற ஸ்டாலின்.. சீரியஸ் மாற்றம் என்ற பிடிஆர்!
மதுரை: தவெக தனது முதல் சட்டசபைத் தேர்தலிலேயே 35% வாக்குகளை பெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நாம் நிச்சயமாக புது யுகத்தில் இருக்கிறோம் என்று கூறிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக மற்றும் அதிமுக என்ற இருதுருவ கட்சிகளின் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மாதர் பக்ருதீனிடம் தோல்வி அடைந்தார். மதுரையில் மட்டும் 8 தொகுதிகளில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த தோல்வியால் திமுகவின் சீனியர்கள் தொடங்கி அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது பொது வாழ்க்கையில் இருந்து சில நாட்களுக்கு விலகி ஓய்வு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென சில காலம் ஓய்வுக்கு செல்வது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
இதுதொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எழுதியுள்ள கடிதமும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தவெக சின்னக் குழந்தைகள் மூலமாக ஆட்சியை பிடித்ததாகவும், இன்ஸ்டாகிராம் அரசியலில் ஈடுபட்டதாகவும் விமர்சித்தார். ஆனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தவெகவின் வெற்றியை சீரியஸ் மாற்றம் என்று கூறி இருக்கிறார்.
அதில், நான் இந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைவேன் என்று கற்பனை கூட செய்யவில்லை. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக 35% வாக்குகளை பெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. திமுக, அதிமுக என்ற இருதுருவ கட்சிகளின் அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. தவெகவை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன்.
நிச்சயமாக நாம் அனைவருமே ஒரு புது யுகத்தில் இருக்கிறோம். சிலர் நேரடியாக தோல்வி அடைந்ததன் மூலமாக அதனௌ அனுபவப்பூர்வமாக புரிந்து கொண்டுள்ளோம். தற்போதைய சூழலில் அனைவருமே புதிய திறமையை வளர்த்து கொண்டு காலத்தில் ஏற்க தகவமைத்து கொள்ள வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. அப்படி மாற்றத்திற்கு ஏற்ப மாறி முடியவில்லை என்றால், நமக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications