வீரப்பன் மட்டும் இருந்திருந்தால்.. கர்நாடகா உள்ளே நுழைய முடியுமா? வேதனையுடன் பேசிய அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி: இந்த நேரத்தில் வீரப்பன் மட்டும் இருந்திருந்தால் அவர்களால் அணை கட்ட முடியுமா? அவர்களால் (கர்நாடக அரசு) நினைத்து கூட பார்க்க முடியாது... அவர்களால் உள்ளே நுழைய கூட முடியாது. இன்று வீரப்பன் இல்லை.. என பாட்டாளி மக்கள் கட்ச் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரியின் கோரிக்கை மேகதாதுவில் அணைகட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசின் சதி செயலை முறியடிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி முதல் பூம்புகார் வரை நான்கு நாட்கள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

இன்று தர்மபுரி மாவட்டம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலே பேசிய அவர், 12,500 ஏக்கர் காடுகளை அழித்து டேம் கட்ட துடிக்கிறது கர்நாடகா அரசு. நம்முடைய இயற்கை வளங்களை அழித்து விட்டால் அங்குள்ள யானை புலி உள்ளிட்ட மிருகங்கள் எங்கே செல்லும்.
வீரப்பன்
நம்முடைய சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிப்படையும் இதைப் பற்றி எல்லாம் எந்த சிந்தனையும் இல்லாமல் அவர்கள் அணைகட்ட துடிக்கிறார்கள். இந்த நேரத்தில் வீரப்பன் மட்டும் இருந்திருந்தால் அவர்களால் அணை கட்ட முடியுமா? அவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது... அவர்களால் உள்ளே நுழைய கூட முடியாது. இன்று வீரப்பன் இல்லை. நேரத்தில் தமிழ்நாட்டில் 1974 இல் காவேரி பாசன பரப்பு 29 லட்சம் ஏக்கராக இருந்தது. ஆனால் இன்று அது 20 லட்சம் ஏக்கர் ஆக குறைந்திருக்கிறது.
அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் ஒன்பது லட்சம் ஏக்கர் விவசாய பரப்பு குறைந்துள்ளது ஆனால் கர்நாடகாவில் சுமார் 14 லட்சம் ஏக்கர் விவசாய பரப்பு அதிகரித்துள்ளது. மேகதாதுவில் கர்நாடகா அணையை கட்டி விட்டால் மேலும் 10 லட்சம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பு அங்கு அதிகரிக்கும் ஆனால் நாம் விவசாயமே செய்ய முடியாமல் நம்முடைய காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு எப்படி தமிழக இளைஞர்கள் தன்னார்வமாக வந்து போராடினீர்களோ அதுபோல தமிழக இளைஞர்கள் வந்து போராட வேண்டும்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்
கோவை, ராமநாதபுரம், சென்னை, கன்னியாகுமரி என்று அனைத்து பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கும் இது பெரிய பாதிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதுரையில் மேலூரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தான் செயல்படுத்தப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்தான் தமிழ்நாடு முழுவதும் அரிசியாக பயன்படுத்தப்படுகிறது. எனவே டெல்டா மாவட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு என்பதை நாம் உணர வேண்டும்.
மேகதாது அணை
மேகதாது அணையை கட்டி விட்டால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்,ராமநாதபுரம் குடிநீர் திட்டம்,மதுரையில் மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் மேட்டூர் உபரி நீர் திட்டம் இப்படி பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் ரத்தாகும் எனவே தமிழ்நாட்டில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படும். கர்நாடகாவில் காங்கிரசும் பிஜேபியும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள் எனவே மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் மீண்டும் ஆட்சிப் படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக தான் செயல்படுவார்கள்.
அந்தமான் நிக்கோபார்
நாட்டிற்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் எனவே நமக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் மட்டுமே. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் The Great Nicobar Project என்ற ஒரு ப்ராஜெக்ட் அறிவித்து இருக்கிறார்கள். சீனா-வின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. திட்டம் வந்தால் மரங்கள் வெட்டப்படும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என ராகுல் காந்தி அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார் அவருடைய எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம்.
சுற்றுச்சூழல் பாதிப்பு
அந்தமானுக்கு ஒரு நீதி கர்நாடகாவுக்கு ஒரு நீதி என்று இருக்கக் கூடாது.கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டினால் இங்கே நம்முடைய சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அதற்காக ராகுல் காந்தி குரல் கொடுக்க வேண்டும். நாங்கள் ராகுல் காந்தியிடம் சண்டை போடவில்லை. ராகுல் காந்தியிடம் இதை வேண்டுகோளாக வைக்கிறோம். உங்களுடைய காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடக முதலமைச்சர் இடம் பேசி இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications